Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: நடிகர் விஜய் அலுவலகத்தில் மர்மமான மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை மாற்றி அமைத்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரின் அலுவலகம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ளது. இங்கு விஜய் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார். இதனால் இந்த அலுவலகம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் உட்புற பகுதிகளை புதுப்பிக்கும் பணிகளுக்காக சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெயின்டர் பிரபாகரன். இவர் அலுவலகத்தில் தங்கி பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். சம்பவத்தன்று சம்பளம் வாங்கிக் கொண்டு தன்னுடைய குடும்பத்தை பார்க்க சென்று விட்டு, பின் மது போதையில் விஜய் அலுவலகத்திற்கு பிரபாகரன் திரும்பியுள்ளார். அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு சாப்பிடுவதற்கு நூறு ரூபாய் தருமாறு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதையடுத்து சக ஊழியர்கள் விஜய் அலுவலகத்தில் வேலை செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது அலுவலகத்தில் உட்புறம் பிரபாகரன் இறந்து கிடந்துள்ளார். அவருடைய வாயிலும் கையிலும் புரோட்டா இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |