மாணவச் செல்வங்கள் இந்த வயதில் படிப்பில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும் என்றும் அதுதான் எதிர்காலம் சிறப்பாக அமைய வழிவகுக்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
முதியவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். திருச்சி வாழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
இந்த உறுதிமொழி நிகழ்ச்சிக்கு பிறகு மாணவர்கள் மத்தியில் பேசிய தமிழக கல்வி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதியவர்களிடம் நாம் எப்போதும் அன்பு பாராட்டுவதோடு இன்முகத்தோடு அவர்களிடம் பழக வேண்டும். தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்த கூடிய விஷயம் என்னவென்றால் மாணவச் செல்வங்கள் இந்த வயதில் படிப்பில் மட்டுமே அதிக நாட்டம் செலுத்த வேண்டும் என்பது மட்டும் தான். கண்ணுக்கு தெரிந்த வயதானவர்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் அதை மகிழ்ச்சியோடு மாணவர்கள் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் உங்கள் மீது கண்டிப்பாக நடந்து கொண்டால் அது உங்களது நலனுக்காகத்தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.