Categories
தேசிய செய்திகள்

10 முதல் 15% கட்டண உயர்வு….. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு….!!!

விமான கட்டணத்தை உயர்த்தப் போவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குறைந்த கட்டண சேவை விமான நிறுவனமாக இருந்தது. இந்த நிறுவனம் தற்போது எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் பண மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 10 சதவீதத்தில் இருந்து 15% வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் கூறியதாவது, விமானத்தின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விமானம் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக விமான எரிபொருட்களின் விலையை குறைக்குமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன். அதன்பிறகு எரிபொருட்களின் விலையானது, நிறுவனத்தின் செயல்பாட்டு செலவில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. இதை நாங்கள் பல நாட்களாக சமாளித்துக் கொண்டோம். ஆனால் தற்போது இந்திய ரூபாய் மதிப்பானது டாலருக்கு நிகராக கடுமையாக சரிந்துள்ளது. இதன் காரணமாகத்தான் விமான கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்றார்.

Categories

Tech |