காட்டுக்கே ராஜா என்று அழைக்கப்பட்டு வரும் சிங்கத்தையே முதலைக்கூட்டம் ஒன்று சுத்துப்போட்ட வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விலங்குகள் குறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான். அந்த அடிப்படையில் காட்டுக்கே ராஜா என்று அழைக்கப்பட்டு வரும் சிங்கத்தையே முதலைக் கூட்டம் ஒன்று சுத்துப்போட்ட வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதன்படி கென்யாவிலுள்ள மசாய் மாரா தேசிய பூங்கா ஒன்றில் ஆண்டனி பெசி என்பவரால் எடுக்கப்பட்ட வீடியோ compass media என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அந்த வீடியோவில் இறந்த ஒரு நீர் யானையின் சடலத்தின் மீது நின்றிருந்த சிங்கத்தை தப்பிக்கவிடாமல் இருப்பதற்காக சுமார் 40 முதலைகள் சிங்கத்தையே சுற்றிவளைத்தது. சிலநொடிகள் கழித்து நீர் யானையின் மீது நின்றுக்கொண்டிருந்த அந்த சிங்கம் சட்டென முதலை கூட்டத்திற்கு டிமிக்கு குடுத்துவிட்டு தண்ணீரில் குதித்து கடகட வென நீந்தி கரைக்கு சென்று தப்பித்துவிட்டது. இது செய் அல்லது செத்துமடி என்ற சொற்றொடருக்கு ஏற்ப சிங்கத்தின் செயல்பாடு இருந்ததாகவும் நெட்டிசன்கள் குறிபிட்டுள்ளனர்.