கிராம் சுரக்ஷா திட்டம் என்பது அஞ்சல் அலுவலகத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்று. குறைந்த முதலீட்டின் மூலம் அதிக லாபம் பெற இது நல்ல வழி. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதம் ரூ.1411 முதலீடு செய்யலாம், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் பெற முடியூம். 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இதில் ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 19 வயது முதலீட்டாளர் 55 வயது வரை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால், ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியமாகச் செலுத்த வேண்டும்.
58 வயது வரை முதலீடு செய்ய அவர் ரூ.1463 டெபாசிட் செய்ய வேண்டும். 60 வயது வரை, முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக ரூ.1411 டெபாசிட் செய்ய வேண்டும். 55 வயதில் முதலீட்டாளர் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சமும் பெறுவார்கள். கிராம் சுரக்ஷா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் கடன் வசதி உட்பட பல நன்மைகளைப் பெற முடியும். இந்த திட்டத்தில் 4 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு மட்டுமே இது கிடைக்கும்.