Categories
உலக செய்திகள்

“2வது முறையாக பிரதமருக்கு கொரோனா”… வெளியான ட்விட்டர் பதிவு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!!!!!!!

மூன்றாவது அலையுடன் கொரோனா தொற்று  குறைந்துவிட்டது என உலக மக்கள் நிம்மதி அடைந்து இருந்தனர். இந்தநிலையில் சில மாத இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் கொரோனா  தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. நான்காவது அலை  வந்து விடுமோ என்னும் அச்சப்படும் அளவிற்கு உலக அளவில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சாமானியர்கள் தொடங்கி விஐபிகள் வரை அனைத்து தரப்பினரையும் கொரோனா  ஒரு வழி செய்து வருகின்றது.

இந்த நிலையில் தமக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டிருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் எனக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி நான் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். மேலும் தடுப்பூசி செலுத்தி இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருப்பதாக உணரவில்லை. எனவே இது நாள் வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அதனை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டுமென ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 5 மாதங்களில் இரண்டாவது முறையாக கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |