Categories
Uncategorized

மக்களே…. தினமும் யோகா பயிற்சி… இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?… படிச்சா அசந்துடுவிங்க….!!!

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டு வருகின்ற ஜூன் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. நமது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க யோகா மிகவும் முக்கியமானதாகும். யோகா செய்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக சர்க்கரை, மலச்சிக்கல் போன்ற நோய்களை எதிர்த்து போராடுகிறது.

அது மட்டுமில்லாமல் மன அமைதி மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கு யோகா மற்றும் தியான அவசியமாக கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் உடலைநெகிழ வைப்பதற்காக மட்டுமே யோகா செய்யப்படுகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. யோகாவின் பல ஆசனங்கள் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன. யோகாவின் உதவியுடன் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். இதனையடுத்து யோகாவின் நன்மைகளை நாம் இங்கு பார்ப்போம்.

  • யோகா தசைகள் உடற்பயிற்சி செய்ய உதவுகிறது. ஆனால் மருத்துவ ஆய்வுகள் யோகா உடல் மற்றும் மன ரீதியாக ஒரு வரம் என்பதை நிரூபித்துள்ளது. மன அழுத்தம் யோகாவால் நிவாரணம் பெறுகிறது மற்றும் நல்ல தூக்கம், தேவையான பசி மற்றும் செரிமான குறைபாடு போன்றவற்றை நீக்குகிறது.
  • உடல் மற்றும் மனதின் உடற்பயிற்சி யோகா செய்வதன் மூலம் உடலுடன் சேர்ந்து மனமும் ஆத்மாவும் ஆரோக்கியமாக இருக்கிறது. யோகா பயிற்சி செய்வதன் மூலம் நோய்களில் இருந்தும் விடுபடலாம்.
  • யோகா நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை அதிகரித்து வருகிறது. உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. ‘
  • யோகா தசைகளை வலுப்படுத்தி உடனே பொருத்தமாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் யோகா உடல் கொழுப்பையும் குறைக்கும்.
  • யோகா மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம் மற்றும் அதிகரித்த ரத்த சர்க்கரை அளவு குறைகிறது. மேலும் நீரிழிவு நோய்களுக்கு யோக மிகவும் நன்மை அளிக்கிறது.

Categories

Tech |