மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் ,
நாட்டின் பொருளாதார கட்டமைப்புகள் வழுவான நிலையிலேயே உள்ளன; இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்றுநோக்குகின்றன.
2006-2016க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சுமார் 27.1 கோடி பேர் வறுமையில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி அமலான பிறகு ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 4% செலவு குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி மூலமாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்கு பணப்பலன் கிடைத்துள்ளது.