Categories
அரசியல்

உடலில் உள்ள பல நோய்களுக்கு…. சிறந்த இயற்கை மருந்து இதுவே…. இனி தினமும் இத பண்ணுங்க…. யோகா டிப்ஸ்….!!!!

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஐநா சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.  யோகா கலையில் முக்கியமான பயிற்சிகளில் ஒன்று மூச்சுப் பயிற்சி. அதில் பிராணாயாமா சுவாச பயிற்சி ஆனது நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் இருக்கும் ஆற்றலை கொடுக்கும் சக்தியை கொண்டுள்ளது. பிராணாயாமா என்பதன் பொருள் உயிர் சக்தி அல்லது நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்யக்கூடிய ஒரு சுவாச முறையாகும். இதனை நாள்தோறும் பயிற்சி செய்தால் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

பிராணாயாமா எப்படி செய்வது?

தரை அல்லது யோகா மேட் ஒன்றில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு உங்கள் கட்டை விரலால் உங்கள் வலது பக்க மூக்கு துவாரத்தை மூடிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களது இடது பக்க மூக்கின் வழியே மூச்சை நன்றாக இருக்க வேண்டும். இது செய்யும் போது முதுகை நேராகவும், உடல் தளர்வாகவும், இடது கையை உங்களது முழங்காலிலும் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு வலது கையின் மோதிர விரலால் உங்களது இடது பக்க மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். பின்னர் வலது மூக்கில் இருந்து மூச்சை வெளியே விடவேண்டும். 15 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் இதே போன்ற செய்ய வேண்டும். தேவைப்பட்டால் 5 நிமிடங்களுக்கு ஒரு இடைவெளியை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

நன்மைகள்:

இந்த பயிற்சியை செய்வதன் மூலம் உடலில் உள்ள சுமார் 80000 நரம்புகளை சுத்திகரிக்க முடியும். அது நம் உடலின் ஆற்றல் ஓட்டத்தை சமன் செய்து ஒட்டுமொத்த நல் வாழ்வை உறுதி செய்கின்றது. இதனை தினமும் செய்து வந்தால் மன ஆரோக்கியம் மற்றும் நோயற்ற உடலை பெற முடியும். தினமும் செய்வதால் எல்லா உறுப்புகளையும் ஆக்சிஜன் சென்றடைய இது உதவுகிறது. அது மட்டுமல்லாமல் செரிமான அமைப்பு சமநிலை ஆகின்றது. உங்களின் சருமம் இயற்கையான பிரகாசத்தை அடையும் . ஒரு நபரின் உயிர் சக்தியை அதிகரிப்பதற்கு இது முக்கிய பங்கு வகிக்கின்றது.

செறிவு மற்றும் நினைவாற்றல், மன அழுத்தத்தை குறைத்து மன ஆரோக்கியத்தை பாதுகாக்க இது சிறந்தது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை கொண்டவர்களுக்கு இது சிறந்த பலனைத்தரும். பிராணாயாமம் ஒரு தியான நிலை என்பதால் அது உடலை அமைதிப்படுத்தி உடலை முழுமையாக ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள தேவையான ஹார்மோன்களை வெளியிடுகின்றன. ரத்த அழுத்தத்துடன்,நீரிழிவு நோய் மற்றும் மன சோர்வு போன்ற கடும் பிரச்சனைகளுக்கும் இது ஒரு சிறந்த இயற்கை மருந்து. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் அனைவரும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த பயிற்சியை தினமும் செய்து வந்தால் ஒரு நபரின் ஆயுட்காலம் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

Categories

Tech |