Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : விவசாயிகளுக்கு ரூ15 லட்சம் கோடி கடன் இலக்கு – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் ,

  • நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்; பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது.
  • “கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பை உறுதி செய்ய பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது!”
  • சூரிய மின்சக்தியில் இயங்கும் மோட்டார்களை அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு உதவி; தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்தப்படும்
  • ஔவையாரின் ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் பேச்சு

Categories

Tech |