நாடு முழுவதும் புதிதாக 300 வங்கிக் கிளைகளைத் திறந்துள்ளது பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் மகாராஷ்டிரா தனது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தில்,வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்ப்பதற்காக புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்கும் முகத்திலும் பணத்தை எடுக்கவும் டெபாசிட் செய்வதற்கும் ஏற்பாடு செய்கின்றது.
இந்த புதிய திட்டத்திற்காக அடுத்த இரண்டு வருடங்களில் நாடு முழுவதும் புதிதாக 300 வங்கி கிளைகளை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலமாக வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுக்கு அருகிலேயே வங்கி சேவைகளை எளிதாக பெறலாம். இந்த புதிய பேங்க் ஆஃப் மகாராசா வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகள் ஏடிஎம் மையங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக அருகிலேயே உள்ளது. ஆனால் பணத்தை டெபாசிட் செய்வதற்கான எந்திரங்களின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது . அதேசமயம் ரீசைக்கிளர் எனப்படும் எந்திரங்களில் பணத்தை டெபாசிட் செய்வதற்கும் எடுக்கவும் முடியும். இதுபோன்ற எந்திரங்களை நாடு முழுவதும் அதிகமான எண்ணிக்கையில் அமைப்பதற்கு பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி திட்டமிட்டுள்ளது.