தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் தடையும் இருக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து TC கோரினால் அவற்றை தடை இன்றி உடனே வழங்க வேண்டும் என்று அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை சேர முன் வரும் மாணவர்களிடம் TC இல்லாவிட்டாலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படி பள்ளிகளில் சேரும் மாணவர்களின் முந்தைய பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று அதை சமர்ப்பித்த பிறகு முறையாக பதிவேட்டில் பதிவு செய்து அவர்களின் மாற்றுச் சான்றிதழை புதுப்பித்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.