ஈரோட்டில் நடைபெற்ற விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் மாதம்தோறும் காலிங்கராயபுரம், கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தங்களது குறைகளை சொல்ல நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகளில் ஒருவர் பேசியபோது, நிர்வாக அலுவலர்கள் சரியாக எங்களை நேரில் வந்து பார்வையிட்டு குறைகளைத் தீர்ப்பது கிடையாது. VAO என்றால் வெட்டி ஆபீஸர் என்று பொருள் என்று பேசினர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் குறைகள் இருந்தால் அதனை மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள் எங்கள் மீது புகார்கள் இருந்தாலும் அந்த புகாரை மட்டும் கூறுங்கள் அனாகரிக பேச்சுக்கள் வேண்டாம் என்று எச்சரித்தனர். இதனால் அதிகாரிகள் கோபமடைந்து கூச்சலிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.