மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் ,
மீனவர்கள் பாதுகாப்பு :
சாகர் மித்ரா என்னும் திட்டம் வாயிலாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
சுகாதாரம் :
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் பங்களிப்புடன் இரண்டாயிரம் மருத்துவமனைகள் அமைக்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கீடு
பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டத்துக்கு ரூ.69ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
ஜன் ஆரோக்யா திட்டம் :
பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டத்துக்கு 3.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.