சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கல்வி நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக தற்போது பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் சென்னை மாநகராட்சிக்கு உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தால் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.