Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிறைவு பெற்ற மீன்பிடி தடை காலம்…. “உற்சாகத்துடன் கடலுக்கு சென்ற மீனவர்கள்”….!!!!!

மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற நிலையில் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்று ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர்.

ஆழ்கடலில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தக் காலம் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினத்தோடு மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் நேற்று அதிகாலையில் இருந்தே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று விட்டனர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதானால் உற்சாகத்தோடு மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடிக்க சென்ற படகுகள் இரவு எட்டு மணியிலிருந்து வர தொடங்கிய நிலையில் பலவகையான மீன்களை மீனவர்கள் கொண்டு வந்தனர். இந்த மீன்களை வாங்குவதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனர். மீன்கள் நன்றாக விற்பனை செய்யப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Categories

Tech |