மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் ,
புதிய கல்விக் கொள்கை :
புதிய கல்விக் கொள்கை நாடு முழுக்க விரைவில் அமல்படுத்தப்படும். மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயிலும் வகையில் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.
150 பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும்.
மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். முதுகலை மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னணி கல்வி நிலையங்களிலும் ஆன்லைன் முறையில் கல்வி பயின்று பட்டம் வழங்கும் முறை அமல்படுத்தப்படும்.
போலீஸ் பல்கலைக்கழகம் :
உத்தரப் பிரதேசத்தில் தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கல்வித் துறைக்கு 99 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கீடு. திறன் மேம்பாட்டுக்கு வரும் நிதியாண்டில் மூவாயிரம் கோடி ஒதுக்கீடு
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ஐந்து நகரங்கள் சீர்மிகு நகரங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.