Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாம்பு கடித்து இறந்து போன குழந்தை”…. புகார் கொடுத்த தாய்…. தந்தை அதிரடி கைது…!!!!!

பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே இருக்கும் காட்டாத்துத்துறையை சேர்ந்தவர் சுரேந்திரன். கூலி தொழிலாளியான இவருக்கு ஷிஜிமோள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் நாலரை வயதில் சுஷ்விகா மோள் என்ற மகளும் இருந்தனர். சுரேந்திரன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து குழந்தைகளையும் மனைவியையும் துன்புறுத்தி வந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதியும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகாத வார்த்தைகளால் திட்டி முடியை இழுத்து தாக்கி இருக்கின்றார்.

மேலும் குழந்தைகளை தாக்கி அனைவரையும் கொன்று விடுவதாக வீட்டிற்குள் வைத்துப் பூட்டியிருக்கின்றார். இதனால் பயந்துபோன மகள் சுஷ்விகா வீட்டின் பின்னால் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு ஓடிய பொழுது அவரை பாம்பு கடித்திருக்கின்றது. இதனால் குழந்தையை மீட்டு அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை சுஷ்விகா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஷிஜிமோள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் போலீசார் கொலை மிரட்டல், சித்ரவதை உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேந்திரனை கைது செய்தார்கள்.

Categories

Tech |