Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் காலநிலை மாற்றம்…. 104 வருடங்களில் உருகிப்போன பனிப்பாறைகள்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

காலநிலை மாற்றத்தை உணர்த்தக்கூடிய வகையில் ஆர்க்டிக் பிரதேசத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தற்போது காலநிலை மாற்றமானது தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அதனால் புவி வெப்பநிலை அதிகரிப்பது மட்டுமின்றி துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் 104 வருடங்களுக்கு முன் ஆர்டிக் பிரதேசத்தில் இருக்கும் பனி பாறைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

அதாவது, நார்வேயின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஸ்வால்பார்ட்டின் பனி பாறைகளின் புகைப்படம் கடந்த 1918ம் வருடத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தோடு தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட்டால், காலநிலை மாற்றம் எந்த அளவிற்கு தீவிரமடைந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

சுமார் 104 ஆண்டுகளுக்கு முன் இருந்த பனிப்பாறை, தற்போது உருகி அதன் பின்புறத்தில் மலைகள் இருக்கிறது. எனவே காலநிலை மாற்றம் குறித்த தீவிரத்தை அனைவரும் உணர வேண்டும் என்று விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |