ஆற்றில் குளிக்கச் சென்ற கூரியர் நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ள நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக குடும்பத்துடன் மணவாளக்குறிச்சி அருகே இருக்கும் சூரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கின்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கடியபட்டணம் அருகே உள்ள மெல்லிய ஆறு கடலுடன் கலக்கும் கழிமுகப்பகுதியில் குடும்பத்துடன் குளிக்கச்சென்றுள்ளார். குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருக்கும்போது கோபாலகிருஷ்ணனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆற்றில் மூழ்கிய தொடங்கியதை பார்த்த குடும்பத்தினர் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து கோபாலகிருஷ்ணனின் மனைவி இதுகுறித்து புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.