Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஒரே நாளில்…. 2 இடங்களில்…. பூட்டை உடைத்து…. துணிகர திருட்டு…. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…!!

செங்கல்பட்டில் ஒரே நாளில் 2 இடங்களில் நடந்த திருட்டு  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். கூலித் தொழிலாளியான இவர் தனது அண்ணன் வீட்டில் இல்ல நிகழ்ச்சிக்காக பூந்தமல்லி அருகே உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதிக்கு வந்து இருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த  6 பவுன் தங்க நகை திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் நாகராஜன் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அதே மாவட்டத்தில் வண்டலூர் அருகே வசித்து வருபவர் சரவணன். இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

தனது சொந்த ஊரான வேலூருக்கு தாய் தந்தையை பார்க்க சென்ற சமயத்தில் இவரது வீட்டிலும் நேற்றையதினம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அதன்படி எல்இடி டிவி செல்போன் ரூபாய் 500 பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே மாவட்டத்தில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவம் அப்பகுதி  மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |