சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியூர் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் மாது என்பவர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய மாதுவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.