Categories
மாநில செய்திகள்

BREAKING : ஒற்றை தலைமை…. “ஓபிஎஸ் வேதனையுடன் பரபரப்பு பேச்சு”…..!!!

அதிமுக தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறுஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். திடீரென ஒற்றைத்தலைமை என்ற பேச்சு ஏன் வந்தது என எனக்கு தெரியவில்லை என ஓ.பி.எஸ் பேட்டி அளித்துள்ளார். கருத்து சொல்ல எழுந்த மாவட்ட செயலாளர் மூர்த்தி ஒற்றை தலைமை பிரச்சனையை முதலில் எழுப்பினார். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியே பேட்டி அளித்ததால் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம், அமைதி காக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டு நாளைக்கு முன்பு அதிமுக தலைமை செயலகத்திற்கு முன்பாக தொண்டர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது கட்சிக்குள் மிகப்பெரிய போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில தரப்பினர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்றும், மற்ற சிலர் ஓ பன்னீர்செல்வம் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வரும் பொதுச் செயலாளர் கூட்டத்தில் இது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இப்படி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |