Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. 40 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…!!

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணன்டஅள்ளி கூட்டு ரோடு பகுதியில் இருந்த ஒகேனக்கல் குடிநீர் மாடரஅள்ளி பகுதிக்கு குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 40 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததோடு, சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த குழாய் மூலம் குடிநீர் நிறுத்தப்பட்டது.

Categories

Tech |