Categories
மாநில செய்திகள்

“நான் ஏசி ரூம் ஆபீசர் இல்ல”….. மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்யணும்….. கூட்டுறவுத் துறை செயலாளர் அதிரடி….!!!!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ரேஷன் அரிசி கடத்தல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நான் ஏசி ரூம் அதிகாரி அல்ல, கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு பணியாற்றுவேன், மேலும், மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம் 10 ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சிறந்த முறையில் பொருட்கள் கிடைக்கும். விவசாயிகளின் நெல் கொள்முதல் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |