Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு கலைத்திறன் மேம்பட பயிற்சி”….. பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அதிரடி….!!!!

மாணவர்களுக்கு கலைத் திறன் மேம்பட பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடப்பாண்டிற்கு ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்த டெல்லியை சேர்ந்த பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்குவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி கலை துறையில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .சரியான வழிகாட்டல் நெறிமுறைகள் இல்லாததால் மாணவர்களின் கலைத்திறன் காணாமல் போய்விடுகின்றது. இப்படிப்பட்ட பயிற்சியாளர்களை கொண்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் கலைத்திறனிலும் மேம்படுவார்கள்.

Categories

Tech |