நடிகை அதிதி சங்கர் ரஜினியுடன் எடுத்த செல்பி புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்ற சங்கர். இவர் தன்னுடைய திரைப்படங்களில் எப்போதும் பிரம்மாண்டத்தை காட்டி விடுவார். இவ சிலர் திரைப் படங்களையே இயக்கியிருந்தாலும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று நல்ல வசூலை பெற்றது. இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற 2007ஆம் வருடம் சிவாஜி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி, ராஜா என பலர் நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக சங்கர் ரஜினியின் வீட்டிற்கு சென்று சந்தித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனமும் கொண்டாடி வருகின்றது. இதற்கு நன்றி கூறுவதற்காக சங்கர் நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு தனது மகள் அதிதி ஷங்கருடன் சென்றுள்ளார். அப்போது ரஜினியுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை அதிதி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதற்கு தான் அப்பா கூட சென்றீர்களா என கேட்டு வருகின்றார்கள்.