Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தப்பித்து ஓடி ஓட்டுநர்….. வாகனங்களை தாக்கிய காட்டு யானை…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானை வாகனங்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று மாலை முள்ளூர் கிராம பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த காட்டு யானை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சிறிது தூரத்திலேயே வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர்.

ஆனால் காட்டுயானை அங்கு நிறுத்தியிருந்த பள்ளி வாகனத்தை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை பார்த்த ஓட்டுநர் கீழே இறங்கி வேகமாக ஓடி உயிர் தப்பிவிட்டார். இதனை அடுத்து அந்த காட்டு யானை ஜீப், அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Categories

Tech |