மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் ,
- மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்காக ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு
- 2025ம் ஆண்டிற்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக்குவதே பிரதமர் மோடியின் கனவு
- தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
- உள்நாட்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
- தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!
- தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டிற்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு!
- உள்நாட்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் –
- கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்காக ‘தான்ய லட்சுமி’ திட்டம் தொடங்கப்படும் தேசிய ஜவுளித்திட்டத்திற்கு ரூ.1,480 கோடி ஒதுக்கீடு
- தேசிய நெசவுத்தொழில் திட்டத்திற்கு ரூ.1,480 கோடி ஒதுக்கீடு
- பிரதமரின் ஜன் அரோக்கிய யோஜனா திட்டத்திற்கு ₹69,000 கோடி ஒதுக்கீடு!