விஷப் பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்து காட்டு பகுதியில் விட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் ஜீவா நகர் பகுதியில் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டிற்கு அருகே இருக்கும் கோழி கூண்டில் விஷப்பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து சுபாஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுபாஷ் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த விஷப் பாம்பை பிடித்தனர். அதன் பிறகு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட விஷப்பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.