மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் ,
பட்டியிலனத்தவர்கள், பழங்குடியினர் மேம்பாடு :
பட்டியலினத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாத உயர்வுக்கு 85 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
பழங்குடியினரின் வாழ்வாதார உயர்வுக்கு 53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் :
பேட்டி பச்சாவ் என்ற பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது. பெண்கள் தொடர்பான திட்டங்களில் அரசியல் செய்யக்கூடாது. ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகம் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
பாரத் நெட் திட்டம் :
பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக்கல் (கண்ணாடி இழை) மூலமாக திட்டம் அறிமுகம். நாடு முழுக்க தகவல் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
தேசிய எரிவாயு தொகுப்பு 27 ஆயிரம் கிலோ மீட்டர் தொகுப்பாக விரிவாக்கம் செய்யப்படும்.
தேசிய அளவிலான இரண்டு அறிவியல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.