விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று எதிரிகள் மறையக் கூடும் எதிரிகளின் தொல்லை குறையும்.
இன்று நீங்கள் எதிர்பார்த்து வரவுகள் உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். அதாவது இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாகவே உள்ளது. மனதில் நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்கும். நீங்கள் சொந்த வீடு வாங்க போட்டிருந்த திட்டம் நல்ல விதத்தில் முன்னேற்றம் அடையும். உங்களுடைய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கிடைக்கும். புது பெண்களின் சினேகம் உண்டாகும். காதலில் வயப்படக்கூடிய யோகமும் உள்ளது. இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரம் மற்றும் எண்ணெய் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு பணம் பற்றாக்குறை கொஞ்சம் ஏற்படலாம்.
இன்று நீங்கள் திட்டமிட்டு செய்து வெற்றி அடைவீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கூடுதலாக லாபம் கிட்டும். கடன் பிரச்சினைகள் கூட ஓரளவு கட்டுக்குள் இருக்கும். கடன்கள் கூட ஓரளவு அடைபட்டு விடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் மேல் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது.
முடிந்தால் நீங்கள் ஆலயம் சென்று வழிபடுவது சிறந்தது. இன்று நீங்கள் எதிர்பார்த்திராத வகையில் தன வரவும் கிட்டும். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் தடை இல்லை. முன்னேற்றம் காத்திருக்கிறது. இன்றைய நாள் ஒட்டுமொத்தத்தில் சிறப்பான தருணங்களை அனுபவிக்கும் நாளாகவே இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைக்கூடும். காதலில் உள்ள சிக்கல்கள் தீர்ந்துவிடும். இன்று நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாளாகவே இருக்கிறது. கல்விக்காக நீங்கள் எடுத்த அனைத்து சிரமங்களும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பழுப்பு நிறம்.