Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேவியர் காலனியில் ஜாக்கோப் மெல்கி எத்தேன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜாக்கோப் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜாக்கோப்பை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஜாக்கோப்பிற்கு 1000 ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |