கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்.
முறையற்ற வழியில் இருந்து கூட பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அரசியல் துறையில் உள்ளவர்கள் உடைய நட்பு கிட்டும். அரசாங்க உயர்வான சூழல் உங்களுக்கு உருவாகும். அரசாங்கம் மூலம் உயர்வான விஷயங்களை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
உறவுகளுக்கு இடையே சில மனக்கசப்புகள் வரக்கூடும். உங்கள் தேவைக்காக சிறிது பணம் கடனாக வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
உறவினர்களிடம் கோபப்படாமல் பேசுவது சிறந்தது, நண்பர்களிடமும் கோபப்படாமல் பேசுங்கள். கோபத்தை குறைத்தால் நன்மை ஏற்படும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இழப்புகள் கூட ஏற்படலாம், இழப்புகளை நீங்கள் சரி செய்து விடுவீர்கள். இன்று உங்களுக்கு வீண் அலைச்சல் அதிகரிக்கும். வெயிலில் சுற்றுவதை நீங்கள் குறைத்துக் கொள்வது சிறந்தது.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் குறைந்தாலும் லாபம் வருவதில் சிறிது காலதாமதம் ஏற்படும். இன்று நீங்கள் சாமர்த்தியமாக பேசுங்கள் புத்தி கூர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். தெளிவாக சிந்தனை செய்யுங்கள். மனதில் இருந்த குழப்பங்கள் தயவு செய்து விட்டுவிடுங்கள். மற்றவரின் செய்திகளுக்கு தயவுசெய்து பொறுப்பு ஏற்காமல் நடந்து கொள்ளுங்கள். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது சிறந்தது.
நிதானத்தை கையாள்வது சிறந்தது. மன மகிழ்ச்சியான அளவு பணவரவு இருக்கும்.
நீங்கள் ஆலயம் சென்று வழிபடுவது சிறந்தது. ஆன்மீகத்தில் சிறிதும் நாட்டம் செலுத்துவது சிறந்தது. இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். யாரைப்பற்றியும் விமர்சனங்களும் கேலி கிண்டல் பேசிக்கொள்ளும் வேண்டாம். காதலில் உள்ளவர்கள் நிதானப் போக்கை வெளிப்படுத்த வேண்டும். இன்று என்னால் காதல் சிறிது இனிப்பும் கசப்பும் ஆகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.