Categories
Uncategorized

“சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு”….. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ….!!!!

புதிதாக சிலிண்டர் வாங்குபவர்களுக்கு டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

முதன்முதலில் சிலிண்டர் இணைப்பு வாங்குபவர்களுக்கு 2 பர்னர் கொண்ட ஒரு கேஸ் அடுப்பு, ஒரு காலி சிலிண்டர், ஒரு லைட்டர் மற்றும் கேஸ் பைப் வழங்கப்படுகிறது. இவற்றின் விலையை வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே வசூலிக்கப்பட்டுவிடும்.  அதுதான் டெபாசிட் பணம். டெபாசிட் கட்டணம் என்பது சிலிண்டர் இணைக்கான செலவை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியது.

இதற்கு ரீஃபண்ட் கிடைக்கும். பின்னாட்களில் தங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வேண்டாம் என்று திருப்பிக் கொடுக்கும்போது ரீஃபண்ட் தொகை வழங்கப்படும். கடையில் ஒரு பொருளை விலை கொடுத்து வாங்குவது போல, சிலிண்டர், அடுப்பு போன்றவற்றை விலை கொடுத்து வாங்குவது.

இதற்கு முன்பு நீங்கள் புதிதாக சிலிண்டர் இணைப்பு வாங்கும்போது,

ஸ்டீல் அடுப்பு – ரூ.1900

கிளாஸ் அடுப்பு – ரூ.2850

சிலிண்டர் – ரூ.1450

ரெகுலேட்டர் – ரூ.150, என்ற அளவில் மொத்தம் 3500 ரூபாய் (ஸ்டீல்) கொடுக்க வேண்டும்.

தற்போது சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு டெபாசிட் தொகை 750 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி,

ஸ்டீல் அடுப்பு – ரூ.2350

கிளாஸ் அடுப்பு – ரூ.3500

சிலிண்டர் – ரூ.2200

ரெகுலேட்டர் – ரூ.250 என மொத்தம் ரூ. 4800 ரூபாய் கொடுக்க வேண்டும். சிலிண்டர்க்கான ஸ்டீல் விலை உயர்வு போன்ற காரணங்களால்தான் கட்டணம் உயர்த்தப்பட்டதாகத் தெரிகிறது

ஏற்கனவே இந்தியாவில் சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது மக்களிடையே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெபாசிட் தொகையும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்திற்கும் மேல் சென்று விட்டது அது மட்டுமில்லாமல் டெலிவரி சார்ஜ் என்ற பெயரில் நூறு ரூபாய் வரை வசூல் செய்து விடுகின்றனர். மானியமும் சிலருக்கு வழங்கப்படுவதில்லை. இதுபோன்ற சூழலில் சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |