மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் ,
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் :
ஆதிச்சநல்லூர் உள்பட ஐந்து இடங்களில் தொல்லியல்துறை அருங்காட்சியகம் அமைக்கப்படும். இந்திய பாரம்பரிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கலாச்சாரத்துறைக்கு ரூ.3150 கோடி ஒதுக்கீடு.இந்திய பாரம்பரிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
பட்டியிலனத்தவர்கள், பழங்குடியினர் மேம்பாடு :
பட்டியலினத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு 85 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
பழங்குடியினரின் வாழ்வாதார உயர்வுக்கு 53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
சுற்றுலா திட்டத்துக்கு இரண்டாயிரத்து 500 கோடி ஒதுக்கீடு.