Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒரு கை ஓசை’ படத்திலேயே சாதியை எதிர்த்தேன் – இயக்குநர் கே. பாக்யராஜ்..!!

சிறுவயதில் தான் கண்ட சாதி தீண்டாமையை பார்த்து ‘ஒரு கை ஓசை ‘படத்தில் சாதியை எதிர்த்துள்ளதாக இயக்குநர் கே. பாக்யராஜ் கூறியுள்ளார்.

மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன் , இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் அபி சரவணன், சண்டைக் கலைஞர் ஜாகுவார் தங்கம், படத்தின் கதாநாயகன் கமல் கோவிந்த்ராஜ், இயக்குநர் மின்னல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் பேசுகையில், ‘ஒரு கை ஓசை ‘ படத்திலேயே நான் சாதியை எதிர்த்துள்ளேன். வெள்ளாங்கோயில் எனும் ஊரில் சிறுவயதில் சாதித் தீண்டாமையை டீக் கடைகளில் பார்த்தேன். அதை மனதில் வைத்துதான் ‘சங்கிலி முருகன்’ எனும் கதாபாத்திரத்தை அந்தப் படத்தில் இணைத்தேன். சாதிப் பிரச்னை தற்போது அதிகமாகியுள்ளது. அனைவரும் சமம், சாதி கிடையாது என்பது நகரங்களைப் போல கிராமங்களிலும் வர வேண்டும்.

நடிகர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மற்றவர்களுக்கு வழங்க முன்வர வேண்டும் , டிக்கெட் விலையை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு கதாநாயகர்களுக்கும் உண்டு, என்றார்.

Categories

Tech |