Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. அனைவருக்கும் முழு சம்பளம்…. தமிழகத்தில் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணியாற்ற வருகின்றனர்.அவர்களுக்கு மாதம் 10,000 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. வாரத்தில் மூன்று அரை நாட்கள் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்கலாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி யாற்ற நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்து வழங்கப்படும் என்பதால் விடுப்பு எடுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்க இயலாது.மேலும் இதுகுறித்து அறிவுரைகளை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |