சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதுகுறித்த அறிவிப்பை சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மூலம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் பருவத்தில் நடைபெற்ற இளநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 17) மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் இந்த தேர்வு முடிவுகளை http://www.ideunom.ac.in/என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Categories