அமெரிக்காவில் 2006ஆம் வருடம் செப்டம்பர் 11 ஆம் தேதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி பயங்கரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொடிய தாக்குதல்களில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப் பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளது. அங்கு தலிபான்கள் ஆட்சியை அமெரிக்கா அகற்றி ஜனநாயக ஆட்சியை நிறுவியது. 20 வருட காலமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து விடைபெற்று செல்லும் போது அமெரிக்கப் படைகள் தங்களது ஆயுதங்களையும் தளவாடங்களையும் அப்படியே விட்டு சென்றுவிட்டது. மேலும் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்ட இராணுவ தளங்களிலிருந்து ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் ஆயுத கடத்தல் காரர்கள் சேகரித்து அவற்றை ஆப்கானிஸ்தான் அரசிடமிருந்தும், தலீபான்களிடமிருந்து வாங்கி ஆயுத சந்தைக்கு அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஆயுத சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு அந்த ஆயுதங்கள் கடத்தப்பட வாய்ப்பு இருக்கின்றது. அந்த ஆயுதங்களை இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு பயன்படுத்தக் கூடும் என கனடாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற சர்வதேச உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் பெருமளவிலான ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் தலிபான்கள் கைப்பற்றி இருக்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தான் உளவு அமைப்பான உளவுத்துறை பொது இயக்குனரகம் இந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு கடத்தப்பட இருப்பதாக நம்புகின்றது.