Categories
தேசிய செய்திகள்

EPFO நாமினியை மாற்றணுமா?…. இந்த வழியில் ஈஸியா பண்ணலாம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

பணிபுரிபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. தற்போது தாங்கள் பணியாளர் வருங்காலம் வைப்புநிதி அமைப்பு (EPFO) இணையத்தளமான epfindia.gov.in-ல் லாக்இன் செய்து டிஜிட்டல் முறையில் இபிஎஃப், இபிஎஸ் பதிவுகளைச் சமர்ப்பிக்கலாம். இதனிடையில் பணியாளர் வருங்காலம் வைப்பு நிதி அமைப்பானது இபிஎப்ஓ ​​உறுப்பினர்கள் அனைவருக்கும் வருங்கால வைப்புநிதி (பிஎப்) நியமனம் வசதியை வழங்குகிறது. இவற்றில் ஆன்லைன் வாயிலாக ஈஸியாக இபிஎஃப்,இபிஎஸ் நியமனத்தினை சமர்ப்பிக்கலாம். தற்போது EPFO சந்தாதாரர் ஒருவர் தன்னுடைய பிஎப்நாமினியை மாற்றுவதற்கு இபிஎப்ஓ-விடம் விசாரிக்கவேண்டிய தேவையில்லை. அத்துடன் பிஎப் கணக்கு வைத்திருப்போர் புது பிஎப் நியமனத்தினை தாக்கல்செய்து முந்தைய நாமினியை தாங்களாகவே மாற்றிக்கொள்ளலாம்.

இதற்குரிய முழு செயல்முறை: 

# ஆன்லைன் பிஎப் பதிவு செய்ய முதலாவதாக நீங்கள் EPFO​​இன் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான epfindia.gov.inல் லாக் இன் செய்யவும்.

# இதையடுத்து “சர்விஸ்” என்பதில் சென்று ஊழியர்களுக்கான என்ற டேபை கிளிக் செய்ய வேண்டும்.

# சரிவிஸ்-ல் மெம்பர் UAN/ஆன்லைன்சேவை (OCS/OTCP)’ என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

# உங்கள் UAN மற்றும் கடவுச்சொல் வாயிலாக உள்நுழைய வேண்டும்.

# மேனேஜ் டேபின் “இ-நாமினேஷன்” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# குடும்ப அறிவிப்பினை புதுப்பிக்க எஸ் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

# ஏட் பேமிலி டீடெயில்ஸ் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

# மொத்தப்பகுதியை அறிவிக்க “நாமினேஷன் விவரங்கள்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

# அறிவிப்புக்குப்பின் “சேவ் இபிஎப் நாமினேஷனை” கிளிக்செய்ய வேண்டும்.

# OTP-ஐ பெறுவதற்கு “E-sign” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

# பின் உங்களது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

# அந்த OTP ஐ உள்ளிட வேண்டும்.

# அத்துடன் EPFO-​ல் உங்களது இ-நாமினேஷன் பதிவானது முடிந்து விட்டது.

அண்மையில் EPF அறங்காவலர் குழு சென்ற நிதியாண்டில், அதாவது 2021-22க்கான 8.1 % வட்டி விகிதங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விகிதங்களானது EPFO அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நிதியமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, அவை உங்களது கணக்கிற்கு அனுப்பப்படும். சென்ற வருடம் 2020-21 நிதியாண்டில் அக்டோபர் மாதத்தில் இருந்து வட்டி விகிதங்கள் வரத் தொடங்கியது. இந்த வருடம் இதற்குரிய பணிகள் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |