Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. ஆசிரியர் பணியிடை நீக்கம்….!!

9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேகாம்பாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் செந்தாமரை கண்ணன் என்பவர் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பல்லடம் காவல்துறையினர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு சென்று அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி கூறுவதாவது, ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த அறிக்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர் செந்தாமரைக் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |