Categories
தேசிய செய்திகள்

2025ஆம் ஆண்டுக்குள் காச நோயை ஒழிக்க மத்திய அரசு திட்டம்!

2025ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளனர்.

2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது சுகாதாரத் துறையில் கொண்டுவரவுள்ள திட்டங்கள் குறித்து பேசிய அவர், “மலிவு விலையில் மருந்து வாங்குவதற்கு ஏதுவாக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜன் ஆயுஷாதி கேந்திரா திறக்கப்படும். மருத்துவ கருவிகளிலிருந்து கிடைக்கும் வரிப் பணத்தைக் கொண்டு மருத்துவமனைகள் திறக்கப்படும். ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வராத மாவட்டங்களில் மருத்துவமனைகள் அமைக்க நிதி ஒதுக்கப்படும், என்றார்.

மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காச நோயை முற்றிலும் ஒழிக்க புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது” என்றார்.

Categories

Tech |