தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் வரலாற்றில் முதன்முதலாக சென்னை பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலைகளில் ஏதோ ஒரு பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள தகுதியானவர்கள். அதுமட்டுமில்லாமல் 2018 முதல் 2022ஆம் ஆண்டுக்குள் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள முடியும். மேலும் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக அமையும். மேலும் முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு பணிகளுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து தகுதிக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் Job Fair Notification & Application என்ற இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகார பூர்வமான தளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்பின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு ஜூன் 18 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.