Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கார்-ஜீப் மோதல்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. திருப்பூரில் கோர விபத்து….!!

கார் மீது ஜீப் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீலகவுண்டன் வலசை பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெரியப்பா பழனிச்சாமியுடன் காரில் கிணத்துக்கடவில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ஜீப்பை பணத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் பெரியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குடிமங்கலம் அருகில் ஜீப் வந்து கொண்டிருந்தபோது திடீரென பெரியசாமியின் கட்டுப்பாட்டை இழந்த கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த ராமகிருஷ்ணனுக்கு லேசான காயமும், அருகில் இருந்த பழனிசாமி பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் பழனிச்சாமியை உடனடியாக மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குடிமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |