மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஏராளாமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு:
-
பெண்கள் தாய்மையடையும் வயதை நிர்ணயம் செய்வது குறித்து ஆராய ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்படும்; அக்குழுவின் அறிக்கை ஆறு மாத காலத்திற்குள் தாக்கல் செய்யப்படும்
-
பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது தொடர்பான பரிந்துறை அளிக்க புதிய குழு அமைக்கப்படும்
-
பெண் குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ‘பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்’ (பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்) என்ற திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்கள் இத்திட்டத்தால் பெரும் நன்மை அடைகின்றனர்
-
பெண்கள் தொடர்பான திட்டங்களில் அரசியல் செய்யக்கூடாது. ஆண் குழந்தைகளை விட (57.54) பெண் குழந்தைகள்(59.7) அதிகம் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்
-
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையைக் கண்காணிக்க 6 கோடி அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஸ்மார்போன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 கோடி குடும்பங்களின் ஊட்டச்சத்து நிலை கண்காணிக்கப்படுகிறது
-
மேலும், பெணக்ளுக்காக தான்ய லட்சுமி என்ற புதிய திட்டமும் உருவாக்கப்படும்
-
ஆண்களைவிட பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்க திட்டங்கள் உருாக்கப்படும்