மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது சில தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி VPN, DROPBOX, GOOGLE DRIVE போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அரசு ஊழியர்கள் GOOGLE DRIVE, DROP BOX போன்றவற்றில் ரகசிய ஆவணங்களை சேமித்து வைக்கக் கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் இணையத்திலேயே GOOGLE DRIVE மூலமாக சேமித்து வைக்கப்படுகிறது.
அதன்பிறகு VPN சேவைகளால் ஆபத்து நேரும் என அரசு கூறியுள்ளது. இதேப்போன்று CamScanner போன்றவற்றால் அரசு ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதையும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மேற்கண்ட ஆப்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு போன்களை ROOT செய்வதற்கும், ஐபோன்களை Jailbreak செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.