Categories
தேசிய செய்திகள்

#Budget Live : ”எல்.ஐ.சி , வங்கி பங்குகள் விற்பனை” பட்ஜெட்டில் அறிவிப்பு …!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் ,

தனிநபர் வருமான வரி குறைப்பு : 

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை 10 விழுக்காடு

ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 15 விழுக்காடு

ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 20 விழுக்காடு

ரூ.12.5 முதல் ரூ.15 லட்சம் வரை 25 விழுக்காடு வரி

எல்.ஐ.சி., ஐ.டி.பி.ஐ. வங்கி பங்குகள் விற்பனை :

எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் ஒரு பகுதி விற்பனை செய்யப்படும். ஐ.டி.பி.ஐ. பங்குகளும் விற்க நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீர் லடாக் வளர்ச்சி : 

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 30,757 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். லடாக் வளர்ச்சிக்கு 5, 958 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

மூத்த குடிமக்கள் :

மூத்த குடிமக்கள் மேம்பாட்டிற்கு 9, 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

பொருளாதார வளர்ச்சி :

வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காடாக அதிகரிக்கும்.

வங்கிகள் தொடர் கண்காணிப்பு :

வங்கிகள் திவாலானால் வைப்புத் தொகையில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை திருப்பி அளிக்கப்படும். வங்கிகள் தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வங்கிகளில் காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு. பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.

ஜி20 மாநாடு :

2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டிற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு

வரிச்சலுகை :

தொழில்முனைவோர் நடவடிக்கைகள் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது.

மின்னணு பொருட்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை.

சிந்து நாகரீகம் முதல் தற்போது வரை வணிகம், வர்த்தகத்துறையில் சிறப்பான செயல்பாடு.

ஜவுளித்துறைக்கு ரூ.1,480 கோடி நிதி ஒதுக்கீடு.

விரைவில் தேசிய சரக்கு கையாளுதல் கொள்கை கொண்டுவரப்படும்.

Categories

Tech |