Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பதுக்கி வைக்கப்பட்டிருந்த 840 கிலோ ரேஷன் அரிசி”…. அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கியது….!!!!

குளச்சல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 840 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஆங்காங்கே ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. இதனால் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மாரியப்பன் ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரெனால்ட் உள்ளிட்டோர் குளச்சல் பகுதியில் நேற்று மாலையில் தீவிர பணியில் ஈடுபட்ட பொழுது கொட்டில்பாடு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் நாற்பது பிளாஸ்டிக் சாக்குகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பதுக்கி வைத்திருந்த 840 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள்.

இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை அரசு நுகர்வோர் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Categories

Tech |