வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தார்கள்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் வடக்கு பெருமாள்புரம் பகுதியிலுள்ள குறிப்பிட வீடுகளை சுற்றி வளைத்து சோதனை செய்தபோது அங்கிருக்கும் ஒரு அறையில் 25 வயதுடைய ஒரு பெண் 50 வயதுடைய மற்றொரு பெண் அரைகுறை ஆடைகளுடன் இருந்தனர்.
மேலும் மற்றொரு அறையில் 50 வயதுடைய இரண்டு பெண்கள் ஒரு வாலிபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் பொன் செல்வி மற்றும் தங்கம் என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து வெளியில் ஊரில் இருக்கும் பெண்களை வைத்து விபச்சார தொழிலை நடத்தியது தெரியவந்தது. மேலும் அரைகுறை ஆடையுடன் இருந்த வாலிபர் 21 வயதுடைய மலையரசன் என்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தார்கள். விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.